search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா கண்டனம்"

    கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    நைரோபி: 

    கென்யா நாட்டு தலைநகர் நைரோபியில் அமைந்துள்ள ஓட்டலில் நேற்று மாலை பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக புகுந்தனர். ஓட்டல் வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து சென்ற அவர்கள், துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.  

    இதில் ஓட்டல் வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து அங்கு விரைந்த போலீசார், ஓட்டலில் இருந்தவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்நிலையில், கென்யாவில் ஓட்டல் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

    இதுதொடர்பாக ஐ.நா. சபை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கென்யா ஓட்டலில் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது கொடூரமானது. இந்த தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ஐ.நா. பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் மற்றும் ஐ.நா. சபை தலைவர் எஸ்பினோசா ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும், தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KenyaHotelAttack #UNcondemns
    ×